Friday, 31 July 2020

இலங்கை: சாதியும் தேசியமும்!!

''அநகாரிக தர்மபால, ‘சிங்கள பௌத்ததேசியத்தை விதைக்கும் போது, சாதிகளைக் கடந்த இன-மத தேசியமாகவே அதைக் கட்டமைத்திருந்தார். ஆனால், அநகாரிக தர்மபாலவின் சமகால எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சி, ‘யாழ்ப்பாணத் தமிழ், சைவ, வௌ்ளாளமறுமலர்ச்சியாக அமைந்திருந்தது

மிஷனரி ஆதிக்கத்தின் கீழாக, கொலனித்துவத்துக்கு எதிரான சுதேசிய மறுமலர்ச்சி எழுச்சியின் போதுகூட, சிங்களவர்கள் சாதிகளைத் தாண்டியதொருசிங்கள-பௌத்ததேசியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கிய போதும் கூட, இலங்கைத் தமிழர்களிடையேயான சாதிப் பிரக்ஞை கைவிடப்படவில்லை.''

Monday, 27 July 2020

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

 * முஸ்லிம்களில் ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.
முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற் கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின் தனித்துவம், மொழியை விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.

அவர்களுடைய தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார்.

* விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும் தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.

குறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்: - எஸ்.எம்.எம் பஷீர்

உலகளாவிய ரீதியில் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக செயற்படும் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) தனது ஆசிய நாடு தொடர்பான ஆய்வறிக்கை இலக்கம் 134இல் இலங்கை இனப்பிரச்சினைக்காக நிகழும் இருபுறச் சமரில் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதான ஒரு விரிவான அறிக்கையினை இவ்வருட மே மாதத்தில் வெளியிட்டுள்ளது. தனது அறிக்கையின் முடிவில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களை மூன்றாவது தரப்பாகக் கண்டு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. சர்வதேச பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட இச்சிபாரிசுகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம் ” வெருகல் படுகொலை” !


2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.

Saturday, 25 July 2020

யாழ்பாணத் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் ஏகாதிபத்தியமோகம். கம்பர்மலை-அழகலிங்கம் (ஜேர்மனி)

1983ல் புலிப் பாசிசவாதிகள் தின்னவேலியில் 13 இராணுவத்தைக் கொன்று ஆத்திரமூட்டி இனக்கலவரத்தைத் தொடக்கிவிட்டு சிங்களவன் அடிக்கிறான் என்று குய்யோ முறையோ என்று கூச்சல்போட்டுக் கொண்டு இந்திய முதலாளிகளிடம்; சரணாகதி அடைந்தார்கள். 1987 இல் இந்தியா அடிக்குதென்று சொல்லிக் கொண்டு பிரேமதாசா ஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் தஞ்சம் புகுந்தார்கள். 1995ல் யாழ்பாணத்தை விட்டு வன்னிக்கு ஓடினார்கள். இன்று இதன்விழைவு பிரபாகரன் சுடுகிறான் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இலங்கை ஆயுதப்படைகளிடம் ஓடுகிறார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் பிற்போக்கின் அந்தலைக்கே ஓடினார்கள்.
-April 28, 2009

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

என்.ராம் 01 Jan 2014 

புலிகளின் தமிழீழம் சாத்தியமா?

* இராணுவ பலத்தினால் மட்டும் புலிகளை வெற்றி கொள்ள முடியுமானதாக இருந்திருந்தால் இலங்கையில் இந்திய அமைதிப்படையிருந்த காலத்தில் ஒரு சில மாதங்களுக்குள் புலிகளை இந்திய இராணுவத்தினர் அழித்தொழித்திருப்பார்கள். அவ்வாறு செய்ய முடியாமல் போனமைக்குப் பிரதான காரணம் மக்கள் அன்று புலிகள் அமைப்புக்கு அளித்துவந்த ஆதரவும் பாதுகாப்புமாகும். 

அன்றைய நிலையைவிட பலநூறு மடங்கு பலம்வாய்ந்தவர்களாகவிருந்த புலிகள் இன்று மிக இலகுவாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கு புலிகள் மீது மக்களுக்கிருந்த வெறுப்பே பிரதான காரணமாக இலங்கை அரசுக்கு உதவியது. அன்று எவ்வாறு புலிகள் அமைப்பு சகல மக்களின் நேசத்திற்குள்ளாகியிருந்ததோ அதேபோல் இன்று புலிகள் அமைப்பு முற்றுமுழுதாக தமிழ்பேசும் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

13 மே, 2009

புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் -கிழக்கான் ஆதம்


''இந்தியாவும் சர்வதேசமும் புலிகளுக்கு காட்டிய கருணையை அவர்களின் பலம் என்று நினைத்துக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயற்பட்டதால் இந்தியா என்ற பூதத்தை பகைத்துக் கொண்டதுடன் அவர்களின் இராணுவத்தை தோற்கடித்தாக கதையும் விட்டுவிட்டு இன்று தன்னிலை அரசால் உணர்த்தப்பட்டவுடன் ஆதரவளிக்காவிட்டால் பரவாயில்லை இலங்கை அரசுக்கு உதவிசெய்யவேண்டாம்என்று இந்தியாவிடம் பிச்சை கேட்க வேண்டியுள்ளது''

Friday, 24 July 2020

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? - கிழக்கான் ஆதம்

கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.


அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்

இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த 2006ம் ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது

-2006
ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

Thursday, 23 July 2020

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2004)


அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் வெல்லப்பட முடியாதவர் அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த கிழக்கு பிளவுஅவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்:- எஸ்.எம்.எம் பஷீர்

உலகமெல்லாம் வலம்வரும் வீரமும், விவேகமும் கொண்ட தமிழர்களாக தங்களைக் கருதுபவர்கள் புலிகளின் மதரீதியான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை எவ்வாறு வெளிக்காட்டி வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு பதிவுசெய்துகொண்டே வருகின்றது

உள்ளுரப் பெருமிதம்கொண்டு அத்தகையத் தாக்குதல்களை தமிழர்களின் வீரமாய் ஆராதிப்பதும் மறுபுறம் நாக்கூசாது உது சிங்களக் காடையன்கள் கiதிகளைக் கொண்டு செய்விச்சதல்லோஎன்றோ அல்லது இனம்புரியாத நபர்களன்றோ நேர்மைத் திறனின்றி வஞ்சனையுடன் கூறுமிவர்கள்தான் இன்று புலம்பெயர் உலகின் பெரும்பான்மை மக்கள்.

Wednesday, 22 July 2020

தற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.

கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்
 
இன்று (10-03-09) இலங்கையின் தென்கரையோர நகரான மாத்தறையில் முஸ்லிம்களின் மீலாத்விழா நிகழ்வின் போது தற்கொலைப் படையை அனுப்பி பாரிய அனர்த்தம் ஒன்றை தமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். 10 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதனால் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனவுணர்வுகள் துன்பத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. 

மீலாத்துவிழா எனப்படும் முகமது நபியின் பிறந்தநாளான இன்று புனித ஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலானது  தற்குறி பிரபாகரனின் தரங்கெட்ட கொடுஞ்செயல்களின் தன்மையை உலகுக்கு இன்னுமொருமுறை உணர்த்தியுள்ளது.

Tuesday, 21 July 2020

வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் இருந்து (1989) முஸ்லீம் காங்கிரஸ்சின் சுயாதீனத்தன்மை வரை: - எஸ்.எம்.எம்.பஷீர்

* பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர். 
 * ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின் 70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில் 50 முஸ்லிம்களை விடுதலையாக்கினர்.
கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே, முகமட் மன்சூர் (முஸ்லிம் காங்கிரஸ்) கொல்லப்பட்டனர்.
* புலிகள் முஸ்லிம் காங்கிரசைத் தடைசெய்தனர்.
மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம் மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈ என் டி எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- எஸ்.எம்.எம்.பஷீர்

பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்: - எஸ்.எம்.எம் . பஷீர்


* பரீஸ் கூட்டத்திற்குப் பின்பு முஸ்லீம்கள் சம்பந்தமாகக் கருணாவைக் கேட்டபொழுது "அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலிகளே முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். அதன் பின்பு புலிகள் முஸ்லீம்களோடு பேசி அவர்களின் தேவைகளை அறிவார்கள்" புலிகள் முஸ்லீம்கள் சம்பந்தமாகத் தசாப்தங்களாக வைத்திருந்த நிலைப்பாடே கருணாவினது நிலைப்பாடாகும்.

* முஸ்லீம்கள் ஒரு தேசிய இனக் குழு. அவர்களுக்கென்று ஒரு கலாச்சார அடையாளமுண்டு. அவர்களின் கலாச்சார அடையாளத்தையும் காணி வைத்திருக்கும் உரிமையையும் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு சேர்ந்துவாழ்வதன் மூலம் மாத்திரம்தான் அவர்களது சமூக அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். சிங்களவர்களும் சுயநல முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறார்கள்" -பிரபாகரன் 

கிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் கிழக்கிலே நடைபெற்ற முஸ்லீம்களின் படுகொலைக்கு கருணாவும் கரிகாலனும் பொறுப்பாளிகள் என்ற நிலைப்பாடே உள்ளது.
 - எஸ்.எம்.எம் . பஷீர்

புகலிடத் தமிழர்களின் வாய்க்கொழுப்பு புலிகளின் சீலையால் வடிகிறது. - கலைச்செல்வி

யுத்தம், அழிவு, மானிட அவலங்கள், மனிதாபிமான பார்வைகள் என்கின்ற பிரக்ஞைகள் மயிரளவுகூட இவர்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் பொங்குதமிழ் நடத்தி தலைவருக்கு ஆணை கொடுத்தபோது அந்த ஞானம் எங்கே போயிற்று? அனுராதபுரத்திற்கு தலைவர் எல்லாளனை அனுப்பினார் என்று ஆரவாரம் பண்ணியபோது எங்கே போனது புத்தி? போதாக்குறைக்கு இறுதி யுத்தத்திற்கு பங்களிப்பு செய்து எக்காளம் உரைத்தபோது யுத்தமென்றால் என்ன செய்யும் என்று இவர்களுக்கு தெரியாது போனதேன்

- கலைச்செல்வி

Monday, 20 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் ( 11- !5)

* மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டா

கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சூழலில் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும் அஷ்ரப்பும் அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.

 எஸ்.எம்.எம் பஷீர்

Saturday, 18 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (6 - 10) எஸ்.எம்.எம். பஷீர்

புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம்

இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிப்பதென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது.

எஸ்.எம்.எம். பஷீர்

Friday, 17 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1- 5)

எஸ்.எம்.எம் பஷீர்

தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும்
கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன
சிரத்தையுடன் தான் அமைத்த கோபுரமும்கோயிலும்
மண்ணோடு மண்ணாயின"
                                                           – கோகிம் நியண்தர்

இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள். எஸ்.எம்.எம்.பஷீர்


புலிகளை திருந்துவதற்கு யாரும் அதனை கேட்கவில்லை, மாறாக அதனை ஒரு அரக்கனாக வைத்திருப்பதே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படை நோக்கமாகும்.

எனவேதான் இன்று வரை புலிகள் புலம் பெயந்துள்ள தமிழரையும் எந்தக்கொலைக்கும் நியாயம் கற்பிக்க பதப்படுத்தி உள்ளர்கள்.

Thursday, 16 July 2020

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா :வி.இ.குகநாதன்

* அருட்பா எதிர் மருட்பா எனும் கருத்தியல் போர் வள்ளலாரிற்கும், ஆறுமுக நாவலரிற்குமிடையே இடம்பெற்றதாகவும், அப் பிணக்கு முற்றி நீதிமன்றம்வரைச் சென்றதாகவும் ஒரு செய்தி பலரும் அறிந்திருப்போம்.

* வள்ளலார் குழு,  நாவலர் குழு,  சிதம்பரம் தீட்சிதர் குழு போன்ற முத்தரப்பினரே இந்தப் பிணக்கில் ஈடுபட்டார்கள்.  மேலும் இப் பிணக்கானது வெறும் கருத்தியல் மோதல் என்பதனைக் கடந்து சாதி ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு வசைபாடலாகவே ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக  தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. 

* முத்தரப்பு பிணக்கில் வெற்றிபெற்றது பார்பனியமே. வள்ளலாரைப் பொறுத்தவரை அவரது இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். அத்துடன்  வள்ளலாரின் சன்மார்க்கம் இன்று நீர்த்திப்போய் வெறும் அன்னதான மடங்களாக சுருங்கிப்போய்விட்டது.  நாவலர் தரப்பினரைப் பொறுத்தவரையில் இன்று ஈழத்திலேயே பார்ப்பனியம் ஆகமங்களை எல்லாம் புறந்தள்ளி வேதங்களை முன்நிறுத்திவிட்டது. அண்மைக் காலத்தில் ஈழத்தில் இந்துத்துவா அமைப்புக்களின் ஊடுருவலிற்குப் பின்னர் `சைவம்`  என்ற சொல்லே `இந்து` என்ற சொல்லால் பதிலீடுசெய்யப்பட்டுவருகின்றது.

புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா? : கோசலன்

* எண்பத்தாறாமாண்டு இரண்டு ரெலோ இயக்கப் போராளிகள் திருனெல்வேலியில் மக்கள் முன்னால் புலிகளால் உயிருடன் தீயிட்டுக் எரிக்கப்பட்டனர். பதின்நான்கு வயது மட்டுமே நிரம்பியிருந்த கிழக்கு மாகணத்திலிருந்து போராடுவதற்காகவே புறப்பட்டவர்கள் ஏன் கொலைசெய்யப்படுகிறோம் என்று தெரியாமலே தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.

தொண்ணூறாம் ஆண்டு வட பகுதியில்ருந்து முஸ்லீம் மக்கள் இரவொடிரவாக வெளியேற்றப்பட்டனர். நூற்றாண்டுகளாக மதவழிபாடு தவிர்ந்த ஏனைய அனத்து சுக துக்கங்களிலும் தமிழ்ப் பேசும் ஏனைய பிரிவினரோடு இரண்டறக் கலந்திருந்த அவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனையில் கட்டளையிடப்பட்டனர். ... எங்கே போகிறோம் என்பது கூடத் தெரியாமல் மரண பயம் பின் தொடர் அவர்கள் தமது சொந்த மண்ணிடம் விடைபெற்ற சோக நிகழ்வு வன்னி முகாம்களில் மக்க்கள் அனுபவித்த துயருக்கு நிகரானது.

* ஆசிய, ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று உலகத்தின் ஒவ்வொரு பிரதான சந்திகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களும் தேசிய இனங்களும் போராட்டங்களை நடத்துகின்றன. ஐரோப்பாவில் ஜனநாயகவாதிகள் உலகமக்களின் உரிமைக்காகக் குரலெழுப்புகிறார்கள்.
இவர்களில் எவரையுமே புலிகள் நண்பர்களகக் கருதியதில்லை. இந்தியாவில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியல்வாதிகளோடும், உலக மாபியக் குழுக்களோடும், அதிகாரவர்க்கத்தோடும் தம்மை அடையாளப்படுத்திய புலிகள் ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட ம்க்களின் போராட்டம் என்பதை உலக மக்கள் நம்ப மறுக்கும் அளவில் தேசியப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்துள்ளார்கள். இவையெல்லாம் தேசிய விடுதலையின் அடிப்படைப் பண்புகளுக்கு மாறானவை.
 
 இனியொரு..


The forced evacuation of Muslims in 1989: Some Reflections: - Nadesan Satyendra, 1996

The first matter is the whole question of the Muslim identity. In the 1880s, for instance, attempts were made by Tamil politicians, such as Sir Ponnambalam Ramanathan to show that Muslims were Tamils whose religion was Islam in the same way as other Tamils were Hindus or Christians.

In a paper entitled "The ethnology of the 'Moors' of Ceylon", read before the prestigious Ceylon Branch of the Royal Asiatic Society, Ramanathan contended, advancing physical, social and cultural evidence in his support, that the Muslims originated from South India and were of the same race as the one to which he belonged: in short, the Muslims were really a group of Tamils who had embraced a new religion, Islam. (Collective Identities, Nationalisms and Protest in modern Sri Lanka, edited Michael Roberts).

THE EXPULSION AND EXPROPRIATION OF MUSLIMS IN THE NORTH: - UTHR(J)

The Muslims from Puthukudiruppu, Tharapuram, Uppukulam and Erukkalampiddy were taken to the beach at a place near Erukkalampiddy known as `Five Coconut Trees', and were left there until they could find boats. They had to spend nights in the open in rainy weather with no conveniences and no boutique to obtain food and water. 

Wednesday, 15 July 2020

இலங்கையில் முஸ்லீம்-விரோத சூனிய வேட்டையை தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கின்றனர் -


அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு சிறிசேன அழைப்பு விடுத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்குபற்றி அவசரகால சட்டம் பிரகடனப்படுத்த தனது ஆதரவை வழங்கியது.

அவசரகால சட்டத்தின் பிரிவுகளில் 1978 இல் தமிழ் தீவிரவாதத்திற்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட இழிபுகழ் பெற்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் (PTA) இடம்பெற்றிருந்த பல பிரிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

* அவசரகால நிலைமையின் கீழ், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுகின்றது. 

கூட்டமைப்பின் முன்னிலை உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவரது மே தின உரையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இராணுவ மற்றும் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். முன்பு அவர்கள் இங்கே இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம், இப்போது அவர்கள் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

* இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி அறிவிப்பு 

* கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சரவணபவனுக்கு சொந்தமான பரவலாய் வாசிக்கப்படும் தமிழ் தினசரியான உதயன், யாழ்ப்பாண மசூதியில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தது கறுப்பு தேயிலைப் பொட்டலங்களையே என்பதை நன்கு அறிந்திருந்தும் அவர்கள் அங்கு வெடிமருந்துகளைக் கண்டெடுத்ததாக குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டது