இலங்கை மாகாணப்
போலீஸ் படைக்கு துணையாக செயல்படுவதற்காக அமைக்கப்பட்ட EPRLF குழுவினரின் படை, அம்பாறை மாவட்டத்தை
விட்டு இந்தியப்படை விலகியதும், அங்குள்ள சவளக்கடை
கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று,
சம்மாந்துறை ஆகிய மாகான போலிஸ் நிலையங்களை சுற்றிவளைத்து தாக்கியது.
தனது மாகாணசபை
அதிகாரத்தின் கீழ் செயல்பட்ட, தமிழ்பேசும் மக்களை
அதிகமாகக் கொண்ட போலிஸ் நிலையத்தின் மீது EPRLFயினர் தாக்குதல்
நடத்தியதன் மூலம் தமது நடவடிக்கையின் உள்நோக்கத்தை வெளிக்காட்டினர்.
இதில் காரைதீவில்
மட்டும் 43 முஸ்லிம் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.