Sunday 12 February 2023

Road to Nandikadal


By Maj. Gen. Kamal Gunaratne

தமிழில் Rajh Selvapathi                             (முன்னாள் ஐ. நா. சபை     உத்தியோகத்தர், கிளிநொச்சி)

800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.

அந்த சதுர நிலப்பரப்புக்குள் அடுத்த நாள் வரை அகப்பட்டிருதால் அவர்களின் முடிவை நெருங்குவாரகள் என்பது தெள்ளத்தெளிவாகவே இருந்தது. சுவரை தள்ளுவதுபோன்று தப்பிப்பதற்காக அதி உச்சளவிலான மூர்க்கதனமான முயற்சித்தனர், மரணபுள்ளியில் உள்ள அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்ய்பும் நிலையில் இருந்தனர். நந்திக்கடல் நீரேரியின் ஓவ்வொரு மூலையும் படையினரால் சூழ்ப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் ஏதாவது ஒன்றை செய்தேயாக வேண்டும் என்கின்ற கட்டயத்தில் இருந்தனர். எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதான். இருந்தாலும் இந்த முயற்சிகள் தெளிவில்லாமல் ஒரு முறையான திட்டம் இல்லாமலும் செய்யப்பட்டதாகவே நான் உணர்கின்றேன்.


அந்த சதுர நிலத்தினுள் அண்ணளவாக 700 பயங்கரவாதிகள் இருந்திருக்ககூடும். பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான், பாணு, ஜெயம், சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் போன்ற மேல் நிலை தலைவர்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர். மே 17ல் சூசை தலைமையிலான அவர்களின் பெரும் முயற்சி தோல்வியில் முடிந்து பின் அடுத்ததாக அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்துகொண்டனர். முதல் குழு யாரோ ஒரு மூத்த தலைவரால் தலைமை தாங்கப்பட்டது. இரண்டாவது குழுவை ரட்ணம் மாஸ்டரும் சாள்ஸ் அண்டனியும் தலைமை தாங்க மூன்றாவது குழு பிரபாகரன் தலைமையில் எஞ்சியுள்ள ஏனைய புலி தலைமைத்துவமாக இருந்தது. முதலாவது குழு அந்த நிலப்பகுதியிலேயே தங்கியிருக்க தீர்மாணித்திருந்தது. பெரும்பாலான பயங்கரவாதிகள் இன்னும் அந்த பகுதியிலேயே இருக்கின்றனர் என எம்மை நம்பவைத்து ஏனையவர்களை தேடபிடிக்க முடியாத வகையில் தப்பிசெல்ல வைக்கும் ஒரு தந்திரோபாய புகைதிரையாகவே அதனை நான் பார்கிறேன். இருள தொடங்கியபடியால் இரண்டாவது, மூன்றாவது குழுக்கள் கிழக்கு கரை வழியாக கடல் நீரேரிக்குள் இறங்கிவிட்டனர். கிட்டதட்ட 1 ½ கிலோ மீற்றர் தூரம் மேற்கு நோக்கி நடந்து பின் வடக்கு நோக்கி 4 கிலோமீற்றர் தூரம் நடந்து பொதுமக்கள் தப்பிவருவதற்க்காக படையினரால் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைக்கு அருகில் வந்துவிட்டார்கள். இரண்டாவது குழுவை சேர்த சிலர் சாள்ஸ் அண்டனி தலைமையில் இராணுவ நிலையை அணுகி தாங்கள் பொதுமக்கள் எனக்கூறி தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதல் தடவை நிராகரிக்கப்பட்ட போது மீண்டும் கடல் நீரேரிக்கே திரும்பி சென்றவர்கள் ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் அதே கோரிக்கையுடன் வந்தனர். அவர்கள் எங்களிடம் வருவதற்கு முன்பாகவே அநத இராணுவ நிலைக்கு அருகே கிழக்கு கரையில் ஒரு பெரும் குழு தாக்குதலுக்கு தயார் நிலையில் கூடியிருதது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த அதிகாரி வானை நோக்கி சுடவே கரையோரமாக நீருக்குள் நிலைபடுத்தப்பட்டிருந்த எதிரிகள் படையினரை நோக்கி சுடத்தொடங்கினர். இது எதிர்பாக்கப்படாத மோசமானதாக்குதலாக இருந்தது. இரண்டாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 350 பயங்கரவாதிகள் முன்னரங்க நிலைகளை உடைத்துக்கொண்டு எமது பகுதிகளுக்குள் ஊடுறுவிட்டார்கள். உடனடியாகவே ஆட்லறி, மோட்டார் தாக்குதலை நடத்துமாறு நான் உத்தரவிட்டேன். இதனால் உள்நுழைய தாயாகாக சற்று தொலைவில் இருந்த பிரபகரனுடன் இருந்த மூன்றவது குழு வடக்கு பக்கமாக தள்ளப்பட்டு அடர்ந்த கண்டல் காட்டினுள் மெதுவாக நகர்ந்து தப்பி சென்றுவிட்டனர்.


மூன்றாவது குழு கண்டல் பற்றைகளுக்குள் தப்பி சென்றதற்காக அறிகுறிகள் எதுவும் எமக்கு தென்படவில்லை. அதே நேரம் இரண்டாவது குழுவுடன் கடும் சண்டை மூண்டது. அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய சண்டை முற்பகல் 11.00 மணிவரை தொடர்ந்து. அடுத்தநாள் சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் உட்பட 350 பயங்கரவாதிகள் கடைசியாக கொல்லப்பட்டிருந்தனர். இதற்கிடையே அந்த 800x800 சதுர மீட்டர் நிலபகுதியின் மீது காலை 10.00 மணியளவில் தாக்குதலை தொடங்கப்பட்டு முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதலாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 150 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்று மாலைவரை முதலாவது, இரண்ண்டாவது குழுக்களை சேர்ந்த 500 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

மதியம் 12.30 மணியளவில் சூசையுடன் சேர்ந்த குழு ஒன்று கண்டல் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக எமக்கு கிடைத்த தகவல் படி மூன்றாவது குழுவினர் மீதான தாக்குதலை ஆரம்பித்தோம். மாலை 6.30 மணியளவில் சண்டை ஓய்ந்தது. உயர் நிலை புலி தலைவர்கள் உட்பட150 மேற்பட்ட பயங்கரவாதிகள் செத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியிருந்தாலும் சிறு சிறு மோதல்களுக்கு மத்தியில் பிரபாகரன், சூசை உடபட மேலும் 50 பேர்கள் எனது படையினருக்கு அகப்படாமல் கண்டல் பற்றைக்குள்ளேயே மறைந்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை வரை நான் எனது படைகளை அவ்விடத்தை விட்டு நகர்த்தாத படியால் 19ம் திகதி காலை பிரபாகரனும் சூசையும் ஏனைய 50 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டை உறுதிபடுத்தியது வரை அவர்களால் தொடர்ந்து பதுங்கியே இருப்பதை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி தோட்டா இருக்கும் வரை, கடைசி பயங்கரவாதி இருக்கும்வரை அந்த கடைசி குழு போராடிக்கொண்டிருந்ததை நான் கூறியே ஆக வேண்டும். அவர்கள் எங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்கள் உண்மையான சண்டை வீரர்கள்

நிஜக்கதை


மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு நில கண்டல் பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

                   மாதவன் மாஸ்ரர்




ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டிருந்தது. கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர். தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர். மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள். ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேளவியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது. பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரைகொள்ள முடிந்தது. ஆனாலும் எனது உறக்கம் “பிரபாகரன் எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது. வார்த்தைகளால் விபரிக்க முடியாத துயரங்களை ஏற்படுத்திய, பல்லாயிரக்கணக்கான இந்நாட்டு மக்களின் சாவுக்கு காரணமான கொலைகாரன் பிரபாகரனின் பெரும் பலமாகவும் தூணாகவும் இருந்த அனைவரும் இன்று கொல்லப்பட்டுவிட்டனர். ஆனால் அவர்களுக்கு கட்டளையிட்டு கொலை செய்வதற்கும் குற்றங்கள் புரியவும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த அவர்களின் தலைவன் பிரபாகரன் இன்னும் இருக்கின்றான். அவனுடைய கொலைதிட்டத்துக்கு வடிவம் கொடுத்தது ஈழக்கனவுக்கு ஊகம் கொடுத்த பொட்டு அம்மானும், சூசையும் கூட இன்னும் சுதந்திரமாக இருக்கின்றனர். அப்படியென்றால் இன்று சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் கொண்டாட்டங்களின் ஈடுபடும் அந்த மக்களின் மகிழ்ச்சி எவ்வளவு காலத்துக்கு நீடிக்க போகின்றது? அவர்களால் எப்படி அமைதியாக வாழமுடியும்? ஒருவேளை சந்தர்ப்பம் கிடைத்து பிரபாகரன் மீளவும் போரை தொடக்கிவிட்டால் “ நீங்கள் போரை முழுமையாக முடிக்கவில்லை” என இந்த மக்கள் எங்களை நோக்கி விரலை நீட்டுவார்களே? அப்படி நடந்தால் அவர்களை என்னால் குறை கூற முடியாதே?. பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும். அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும். ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன. இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்.


இல்லாமலேயே போனது. 

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த படையியினர் அந்த தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர்.  இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன். அதற்கேற்ப 4வது விஜயபாகு படைபிரிவின் கட்டளை அதிகாரியை அழைத்து தலா 8 பேர் கொண்ட இரண்டு படை அணிகளை தாக்குதலில் இறக்குமாறு அறிவுறுத்தினேன். அதி சிறப்பு தகமையும் துணிச்சலும் கொண்ட இந்த படையணிகளை கோப்ரல்களான விஜயசிங்க, முத்துபண்டா ஆகியோர் வழிநடத்தினர். அடுத்து வந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே சண்டையை அவர்கள் முடித்துவிட்டனர்.  என்னுடைய வாழ்நாளில் நான் முன்பு எப்போதுமே கேள்வி பட்டிருக்காத அந்த அற்புதமான, முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன்,


சேர், இப்போது நடந்த இந்த கடைசி சண்டையில் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்.” 

கேணல் ரவிபிரிய இதனை கூறினார்.  அப்போது கண்டல் பற்றைக்காட்டின் ஓரத்தில் கேணல் ரவிபிரிய, கேணல் சுத்தா பெரேரா, லெப்.கேணல் லாலந்த கமகே, லெப்.கேணல் திலக் ஹங்கிலிபொல ஆகியோர் நின்றுகொண்டிருந்தோம். மகிழ்ச்சி ததும்பிய இனிப்பான ஆனால் நம்பவே முடியாத அந்த செய்தியை ரவிப்பிரியவுக்கு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து கூறியவர் மேஜர் ரோஹித அலுவிஹார.

 “ அது பிரபாகரன்தானா? நன்றாக பாருங்கள்” 

என நான் அவர்களுக்கு கூறினேன். 

 ”சூரியன் சந்திரன் இருப்பது எவ்வளவு உறுதியான தகவலோ அதே போன்றதுதான் பிரபாகரனை நாம் கொன்றதும் சேர்.” 

என மறு முனையில் இருந்து எனக்கு பதில் வந்தது.  இருந்தாலும் அந்த செய்தியை மேலும் உறுத்திபடுத்திக்கொள்ள விரும்பினேன்.  CDMA தொலைபேசியை எடுத்துக்கொண்டு கேணல் லாலந்த கமகேயை அந்த இடத்துக்கு சென்று செய்தியை உறுதிபடுத்துமாறு கூறினேன்.  அடுத்த 10வது நிமிடத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ சேர், அவர்கள் கூறியது சரி. அது பிரபாகரனேதான்.” 

செய்தியை உறுதிபடுத்தினார்.

 “ உறுதியாக கூறுகின்றீர்களா?” 

நான் மீண்டும் கேட்டேன்.  இவ்வாறு நான் இரண்டாவது தடவையாக கேட்டபோது அவர் உண்மையிலேயே உறுதியாக.

” எந்த மாற்றமும் இல்லை. இது பிரபாகரனேதான்” என்றார். 

“ சேர் விரைவாகவே இராணுவதளபதிக்கு அழைப்பு எடுத்து நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கூறுங்கள்” 

என அவர் உட்சாகமாக எனக்கு கூறினார். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சதுப்பு பற்றைகளுக்குள் 200-300மீட்டர் தொலைவில் அவரது உடல் கிடந்தது.  இருந்தாலும் இந்த பெறுமதிமிக்க, எனது வாழ் நாளிலேயே மிக நம்பக்கூடிய இந்த செய்தியை  நானே நேரில் உறுதிபடுத்திக்கொள்ளாமல் இராணுவதளபதிக்கு கூற விரும்பவில்லை. அவசரப்பட்டு இராணுவ தளபதிக்கு நான் இந்த செய்தியை கூறினால் அவர் பாதுகாப்பு செயலாளரருக்கு அறிவிப்பார். பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு செய்தியை கூறுவார். இவர்களில் யாரவது” எங்களுடைய வீரதீரமிக்க படையினர் பிரபாகரனை கொன்றுவிட்டனர்” என ஊடகங்களுக்கு கூறக்கூடும். ஒருவேளை அங்கே கொல்லப்பட்டு கிடப்பது பிரபாகரன் இல்லை எனறால் என்னாவது? 

எனவேதான் அந்த உடலை நான் நின்ற இடத்துக்கு கொண்டுவரும்படி லாலந்தவுக்கு கட்டளையிட்டேன். 




பிரபாகரனின் சடலம் கொணரப்பட்ட என்னிடத்தில்   அதிகாரிகளும் படையினரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய 5000 பேர் வரை அங்கே குழுமி இருக்கலாம் என ஊகிக்கின்றேன். நூற்றுக்கணக்கான படையினர் நாலாதிசைகளிலும் இருந்து எம்மை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர். பல்வேறு ஊடகங்களில் இருந்தும் செய்தியளர்கள்கூட அங்கே வந்து விட்டனர்.  10 நிமிடம் கழித்து 4வது விஜயபாகு படையினர் லாலந்த கமகே ரோஹித் அலுவிகார ஆகியோர் தலைமையில ITN செய்தியாளர் சுஜித் விதான பத்திரன மற்றும் ஒளிப்பதிவாளர் சாமல் ஆணந்த ஆகியோர் புடை சூழ சதுப்பு பற்றைகளுக்குள் இருந்து அந்த அரக்கனின் உடலை சுமந்தபடி வெளிப்பட்டு எனது திசை நோக்கி வந்தனர். பற்றை காட்டுக்குள் இருந்து 4வது விஜயபாகு படையினர் வெளிப்பட்ட உடனேயே என்னை சூழ நின்று கொண்டிருந்த கிட்டதட்ட 5000 படையினரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எங்கள் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் எல்லைகளே இல்லை என நான் அந்த நொடியில் உணர்ந்தேன்.  துரோகியின் உடலை 4விஜயபாகு படையினர் கொண்டுவருவதை கண்ட படையினர் தன்னிலை மறந்து பரவசமாகி வானை நோக்கி வேட்டுகளை தீர்க்க தொடங்கிவிட்டனர். அவர்களின் T56  ரக துப்பாக்கியில் மாத்திரமல்லாமல் கனரக இயந்திர துப்பாக்கிகளில் இருந்தும் தோட்டாக்கள் மழையாக பொழிந்தன.  அதிகாரிகள் சிலர் அதனை நிறுத்த முயன்றனர். ஆனாலும் தங்கள் மகிழச்சியை கொண்டாட அவர்களை அனுமதிக்குமாறு நான்  அந்த அதிகாரிகளுக்கு சைகை காட்டினேன்.  இவர்கள் இந்தநாட்டின் புதல்வர்கள். திகதியிடப்படாத மரண சான்றிதழை கைகளில் வைத்துக்கொண்டு அவர்களுடைய நாட்டுக்காக போராடியவர்கள். இந்த அசுரனின் மரணத்துடன் அவர்களுக்கிருந்த மரண அழுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்ப்பதன் மூலம் அவர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் நாம் அதனை தடுக்க கூடாது என உணர்ந்தேன். துப்பாக்கி வேட்டுக்களின் பெரும் சத்தம் நந்தி கடல்நீரேரியெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது நான் இதை எழுதும் போது பெருமை பொங்கிய அந்த முகங்களில் இருந்து பெரும் கௌரவத்தையும் பெரும் மதிப்பையும் உணர்ந்து கொள்கின்றேன்.

வீரர்கள் அந்த உடலை எனது காலடியில் கொண்டு வந்து போட்ட அடுத்த நொடியே அது பிரபாகரன்தான் என்பதை கண்டுகொண்டேன்.  இன்று கூட நான் இதை மிகைப்படுத்தி கூறவில்லை. அந்த தருணத்தை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் கூட எனது உடல் சிலிர்க்கும். அந்த உடலையும் தலையில் இருந்த ஆழமான வெட்டுக்காயத்தை அகழத்திறந்த கண்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டேயிருந்தேன். நிச்சயமாக இது பிரபாகரன்தான். எங்கள் தேசத்தின் மீது மூன்று தசாப்தங்களாக பெருத்த நாசத்தை கட்டவிழ்த்து விட்டு வலியை தந்து கொண்டிருந்த அதே பிரபாகரன்தான். வயது, பால், இனம், மதம் என எதனையுமே கனக்கில் கொள்ளாது அப்பாவி பொதுமக்களை இரத்தம் தோயத் தோய கொன்று குவித்த, சிங்கள மக்களையும் இந்த நாட்டையும் இனவெறிபிடித்தவர்கள் என கூறித்திரிந்த, இந்த நாட்டை பீடித்திருந்த தசாப்த கால சாபமான கசாப்பு கடைக்காரனான அதே பிரபாகரன்தான் இது. 



ஆனால் அவன் தப்பித்திருந்தால்? உன்னை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்திருந்தேன். நீ உன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை.

நான்: சேர் அவன் தப்பித்திருந்தால் நான் மிக மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பேன். ஆனால் அவன் தப்பிக்கவில்லையே சேர். அவன் தப்பிசெல்வதற்கு முன்பாகவே நாங்கள்தான் கொன்றுவிட்டோமே.

.தளபதி: ஆம், உண்மைதான். நீங்கள் அவனை கொன்றுவிட்டீர்கள். ஆனால் அவன் தப்பித்திருந்தால்?

நான்: சேர், ஆனால் அவன்தான் தப்பிக்கவில்லையே. நாங்கள் அவனை கொன்றுவிட்டோம். அவனது உடல் இதோ என்னிடம் இருக்கின்றது.

கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் என்னை பயங்கரமாக திட்டி கவனயீனம் மீதான நடவடிக்கை எடுத்தார். எனது இராணுவ வாழ்க்கையில் அவர் என்னிடம் இவ்வாறு நடந்துகொள்வது இது இரண்டாவது தடவையாகும். பிரபாகரனை கொன்று பெரும் சாதனையை செய்திருந்தாலும் தளபதி இவ்வாறு திட்டியது எனக்கு பெருந்த ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் தந்தது. நான் மௌனமாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். விசாரணை தொடர்ந்து.

தளபதி: இதோபார் அவன் தனியாக இருந்திருக்க மாட்டான். கூடவே ஏழெட்டு பேர்களாவது இருந்திருக்க வேண்டும். அப்படித்தானே?

நான்: அதைவிட அதிகமாகவே இருந்தார்கள் சேர்

தளபதி: எத்தனை பேர் பத்து பதினைந்து பேர்கள்?

நான்: இல்லை சேர். எல்லாமாக 52 பேர் இருந்திருக்கின்றனர். நாங்கள் 52 இறந்த உடல்களை கைப்பற்றியுள்ளோம்.

தளபதி: என்ன? 52 சூத்தடிக்கிற நாய்கள் நேற்று தப்பி இருந்திருக்கின்றான்களா?

நான்: இயஸ் சேர், அவன்கள் எல்லோரும் இங்கே எங்களிடம் செத்து கிடக்கின்றான்கள். யாரும் உயிருடன் இல்லை.

தளபதி: அப்படியென்றால் நீ உனது கடமையை எப்படி செய்திருக்கின்றாய்? உன்னிடம் எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருந்தோம் தெரியுமா?

சூடுதணிந்தபின் பொஸ் உன்னை மீண்டும் அழைப்பார்” 

என நேசத்துடன் கூறினார். அவர்கூறியது போன்றே 15 நிமிடங்கள் கழித்து இராணுவ தளபதி என்னை அழைத்தார்.

“கமால்” 

அவருடைய குரல் தணிந்திருந்தது, இராணுவ புலனாய்வை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர அங்கே கருணா அம்மானையும் தயா மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு வருகின்றார். பிரபாகரனை முறையாக அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளை செய் என கூறினார். வசை மழையால் இன்னும் ஏமாற்றத்துடனேயே இருந்த நான் அது நிச்சயமாக பிரபாகரந்தான் மேலதிகமான அடையாளம் காணல் தேவையில்லை என கூறினேன். 

” நான் என்ன உனக்கு கூறுகின்றேனோ அதை நீ செய்” 

என கோபத்துடன் கடுந்தொணியில் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

இதற்கிடையே கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் உடல்கள் எடுத்துவரப்பட்டு குவிக்கப்பட்டன. ஓரளவு உயரமான நல்ல உடல்வாகுடன் ஒரு உடலும் அங்கு கொண்டுவரப்பட்டது. அதனை மேலும் ஆராய்ந்ததில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அது கடற்புலிகளின் தலைவர் சூசையினுடையது. இந்த குற்றவாளிதான் கடற்படையின் துன்பங்களுக்கு காரணமானவன். நல்லகாலம் அவன் கொல்லப்பட்டுவிட்டான், அதுவும் எனது படையணி வீரர்களால்.

பிரபாகரன் உட்பட அனேகமாக புலிகளின் மேல்நிலை தலைவரகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் நாங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பது பிரபாகரனின் நெருங்கிய சகாவும் புலிகளின் புலனாய்வு தலைவருமான பொட்டு அம்மானைத்தான். எங்களுக்கு கிடைத்த தகவல்படி எங்களுடைய தாக்குதல் ஒன்றில் புலிகள் சிலருடன் பொட்டு அம்மானும் அவருடைய மனைவி மற்றும் இரு மகன்களும் கொல்லப்பட்டுவிட்டனர். நந்திக்கடல் நீரேரியில் அவருடைய மனைவி , இரண்டு மகன்களின் உடல்களை நாம் கண்டெடுத்திருந்தாலும் நந்திகடல் நீரேரியில் பொட்டு அம்மானின் உடலை எங்களால் காணமுடியவில்லை.


அன்று மதியம் அந்த உடலை முறையாக அடையாளம் காண்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டருடன் ஒரு ஹெலிகொபடரில் வந்தடைந்தார். அடையாளம் காணும் பணி பிரிகேடியர் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆகையால் நானும் மேஜர் ஜெனரல் ஜகத் டயசும் சற்று ஒதுங்கி நின்று நடப்பதை கவணித்துகொண்டிருந்தோம். கருணா அம்மான் எங்களை கடந்து சென்றபோது அருகே நின்றிருந்த விசேட படையணியை சேர்ந்த கோப்ரல் ஒருவர் 

“ இவன் முதலிலேயே வெளியேறிய இருக்காவிட்டால் இவனுடைய உடலும் இங்கேதான் கிடந்திருக்கும்” 

என்றவாறே சுற்றி பார்த்தார். அவருக்கு நாங்கள் நிற்பது சட்டென்று நினைவுக்கு வந்தவுடன் அப்படி கூறியதற்காக அவசர அவரசரமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மூத்த புலிதலைவர் என்ற வகையில் கருணா அம்மான் கூட இராணுவத்துக்கு அதிக சேதத்தை கொடுத்தவர்தான்.அதனால் வெற்றி மயக்கத்தில் படையினர் எதிர்வினையாற்றலாம் என்பதை கருத்தில் கொண்டு கொமாண்டோக்களின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர்களை இராணுவ தலைமயகம் நந்திக்கடலுக்கு அனுப்பி இருந்தது.

பிரபாகரனின் உடலை பார்த்த உடனேயே கருணா அம்மானின் முகம் பெரிய புன்னகையால் பின்னப்பட்டது. ஒருகாலத்தில் நண்பனாகவும் பின் எதிரியாகவும் ஆகிய பிரபாகரனின் இறந்த உடலை பார்பதே கருணா அம்மானின் மகிழ்ச்சிக்கும் பெரும் ஆறுதலுக்கும் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசி வரைக்கும் ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த தயாமாஸ்டர் மிகுந்த துக்கமடைந்தார். இந்த கொடூரமான மனிதனின் உடலை உற்று பார்த்தபோது கண்ணீரில் அவரின் கண்கள் கலங்கின. அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின் எங்களிடம் வந்த கருணா அம்மான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக கைகுலுக்கினார். ஊடகங்களுக்கும் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்தார். அதன் பின் கொக்கா கோலா ஒரு கோப்பை பருகினார். மகிழ்ச்சியில் இன்னும் பல்லிளித்துக்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த பூமியில் எங்கேயாவது ஒரு இடத்தில் பிரபாகரனின் உடலை நாம் புதைத்தால் அந்த துட்டகைமுனு மன்னன் காலத்தில் எல்லாளனின் புதைகுழி புனித பூமியாகியது போல் ஒரு தசாப்தகாலத்தின் பின் அவருடைய ஆதரவாளர்களால் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுவிடும். ஆகையால் அன்றே அவருடைய இறுதி கிரிகைகளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம்.


பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து பல்வேறுவிதமான வதந்திகள் நாடுமுழுவதும் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தன. எந்த படையணி பிரபாகரனை கொன்றது எனபது விவாதத்துக்கான எலும்புதுண்டாகியது. எங்களுடைய சில அதிகாரிகளும் படையினரும் அதற்கான உரிமை கோரியதுதான் இந்த குழப்பங்களுக்கான மூல காரணம். சிலர் தாங்கள் முதல் நாளே பிரபாகரனை கொன்றுவிட்டு அவருடைய பிஸ்டலை எடுத்துவந்து விட்டதாகவும் அவரது உடல் 4வது விஜயபாகு படையினரால் பின்னர் மீட்கப்பட்டது எனவும் கோரினர். இந்த வதந்திகளை கேள்விப்பட நான் முற்றாகவே மனமுடைந்து போனேன். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு மே 18ம் திகதியே கொழும்புக்கு கொண்டு செல்லப்படதாகவும் அங்கே ஜனாதிபதிக்கு முன்பாக நிறுத்தியபோது, ஜனாதிபதி அவரை அறைந்து முழங்காலில் மண்டியிட செய்ததாகவும் பின்னர் 19ம் திகதி நந்தி கடல் நீரேரிக்கு கொண்டு சென்று பிரபாகரனை கொலை செய்ததாகவும் மற்றும் ஒரு வதந்தியும் எழுந்தது. சிலர் அவர் சினைப்பர் தாக்குதல் கொல்லப்பட்டதாகவும் வேறு சிலர் பிரபாகரன் கொமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறினார்கள். யார் இந்த பச்சை பொய்- பிரட்டு கதைகளை பரப்பினார்கள் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியாமலிருக்கின்றது. மே 19 காலை வரை பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியாது. 4வது விஜயபாகு படைபிரிவை சேர்ந்த தலா 8 பேர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் மேஜர் ரோஹித் அலுவிகார தலைமையில் நடத்திய தாக்குதலில்தான் பிரபாகரன் மே 19 காலை 9.45 மணியளவில் கொல்லப்பட்டுருக்கின்றார் என இராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பான படையணியின் தளபதி என்கின்ற வகையில் அனைத்து ஊகங்களைளுக்கு இஅயம் திரிபுற கூறுக்கொள்ள விருபுகின்றேன். ஏனைய அத்தனை கதைகளும், ஊகங்களும், வதந்திகளும், முற்றிலும் பொய்யானவையாகும்.

அடுத்த சில நாட்களில் கடல் நீரேரிய மேலும் சோதனையிட்டபோது அழுகிக்கொண்டிருக்கும் இறந்த உடல்களையும் பெருந்தொகையில் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். புதுமாத்தளனின் முழு பகுதியும் பூலோக நரகம் போன்று காட்சியளித்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் குழுமியிருந்ததால் அதனை அந்த ஒடுங்கிய நீளமான பகுதியால் கொள்ள முடியாமல் இருந்தது. கோடிக்கணக்கில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த மெல்லிய நீண்ட நிலப்பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நிறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டு சட்டங்களாக காட்சியளித்தன. இருந்தாலும் கடைசி போர்க்களமான புதுமாத்தளனும் நந்திக்கடல் நீரேரி பகுதியும் வெற்றி நிலமாகவே இன்னும் எங்களால் மரியாதையுடன் கருதப்படுகின்றது.



ஈழத்தின் வலி (2014) - பேராசிரியர் உமாகாந்

"ஈழத்தின் வலி" எனும் நூலின் ஆசிரியர் வைத்திய துறையைச் சார்ந்தவராக இருந்து கொண்டு இந்த தலைப்பில் பயன்
 மிக்க நூலினை எழுதியுள்ளமை பாரட்டதக்கது. இந்நூலினை ஈழத்தின் அனைத்து பொது மக்களுக்கும் சாதி-மத பேதமின்றி சமர்ப்பணம் செய்துள்ளமை நூலை முனைப்புடன் படிக்க தூண்டுகின்றது.

நூலாசிரியர் ஒரு அரச (சம்பளம் பெறும்) வைத்தியராக இருந்த போதிலும் தான் வைத்திய மாணவராக இருந்த காலத்திலும், அரச வைத்திய சாலையில் கடமையாற்றிய காலத்திலும் புலிகள் இயக்கத்திற்கு பல உதவிகள் புரிந்துள்ளமையை வெளிப்படையாக எழுதியுள்ளமையும் , தனது மூத்த சகோதரன் கண்ணப்பன் புலிகள் இயக்கத்தின் புலனாய்ப் பிரிவு உயர் அங்கத்தவராக இருந்தார் என்பதையும் (பக் -155) , பிரபாகரன் போர்க் குணம் கொண்டவர் என்பதையும் (பக் - 198) , இறுதிக் காலங்களில் விடுதலைப் புலிகள் மிருகங்கள் போன்று நடந்து கொண்டார்கள் (பக்- 93) என்பதையும் , இறுதி நேரத்தில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி " அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் " எனக் கூறினார் (பக் - 152) என்பதையும் , 2006.08.14ம் திகதி புலிகளின் செஞ்சோலை பகுதியில் விமானப்படையின் குண்டு தாக்குதலுக்கு பலியான மாணவிகள் ஆயுதப் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டனர் (பக்-178) என்பதையும் , இறுதிக் காலப்பகுதியில் அங்கவீனமடைந்த நூற்றுக்கணக்கான தமது சொந்த போறாளிகளைக்கூட இரண்டு பஸ் வண்டிகளில் ஏற்றி புலிகள் வெடி வைத்து கொன்றளித்தனர் (பக்-142) என்பதையும், பிரபாகரன் நீர்மூழ்கியின் உதவியுடன் பெருங்கடல் சென்று தப்பித்தார் எனக் கூறுவது வேடிக்கையானது (பக்-147) என்பதையும் , பிரபாகரன் இறந்துவிட்டார் (பக்-170) என்பதையும் வெளிப்படையாக எழுதியுள்ளதன் மூலம் ஆசிரியர் புலிகள் இயக்கம் பற்றிய பல உண்மைகளை நிதர்சனமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

ஈழத்தின் வலியை மாவில் ஆற்றில் இருந்து நந்திக் கடல் வரை எழுத முனைந்த ஆசிரியர் பல இடங்களில் (அவசியம் கருதி) அந்தக் கால கட்டத்திற்கு முன்னரான சம்பவங்களையும் தொட்டுக் காட்டியுள்ள போதிலும் தமிழ் ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம் மக்கள் ஈழப் போராளிகளால் கொல்லபட்டது  தொடர்பில் ஒரு வாசனமேனும் எழுதாமல் விட்டிருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

விடுதலைப் புலிகளின் பல செயற்பாடுகள் பல இடங்களில் கண்டித்துள்ள ஆசிரியர் , குறைந்தது " புலிகள் ஏன் தோற்றார்கள் " (அத்தி - 33) அல்லது "புலிகளின் வரலாற்று தவறுகள்" (அத்தி-36) என்ற தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களிலாவது முஸ்லிம் மக்கள் 1990ம் ஆண்டில் உடுத்த உடையுடன் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டதையோ, அல்லது பள்ளிவாசல்களில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதையோ ஓரிடத்தில் கூட குறிப்பிடத்தவறியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

"யார் துரோகிகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள 39வது அத்தியாயத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் துரோகிகளாக பார்க்கப்பட்டு இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டனர் என எழுதப்படுள்ளது. இது விடுதலைப் புலிகளை பூசி மெழுகும் ஒரு முயற்சியாகும்.  விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்திலிருந்த முஸ்லிம் போராளிகளைக் கூட கொன்று குவித்தனர் என்பதே அனைவரும் அறிந்த  உண்மையான தகவலாகும். இவ்விடயத்தை திரித்து ஆசிரியர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி , அவர்கள் முஸ்லிம் போராளிகளை இயக்கத்தில் இருந்து விலக்கியதுடன் மாத்திரம் நின்றுவிட்டார்கள் எனகூறியுள்ளார்.தங்களின் இயக்கத்திலிருந்த மத்தையா மற்றும் யோகி போன்ற பெரும் பெரும் முக்கிய (தமிழ்) தலைவர்களை கூடக் கொன்றளித்த புலித் தலைவர் தனது இயக்கத்திலிருந்த முஸ்லிம்களை விலக்கியதுடன் நின்றுவிட்டார் எனக் கூறுவது தர்க்க ரீதியாகக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். 

ஈழப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட வலியை எழுதத் தவறிய ஆசிரியர் " மாவிலாறு அணைக்கட்டு விவகாரம்" எனும் தலைப்பில் எழுதியுள்ளது 12வது அத்தியாயத்தில் 2007ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மூதூரைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சில முஸ்லிம் இளைஞர்கள் சிறைப்பிடிக்கபட்டனர். இவர்கள் "ஜிஹாத்" எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகின்றது என எழுதியிருப்பது முஸ்லிம்களுக்கிடையில் ஒரு போதும் இருக்காததும், முஸ்லிம்களுக்கு மிகவும் வருத்தத்தை தரக்கூடியதுமான ஒரு கருத்தை ஆசிரியர் அது தனது கருத்து அன்றி-கூறப்பட்ட ஒரு விடயம் என்பது போல எழுதியிருப்பது முஸ்லிம்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கும் ஒரு செயலாகும்.

1990ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தமையும் விடுதலை புலிகளின் வரலாற்று தவறுகளில் ஒரு மோசமான தவறாகும் என்பது பல ஈழத் தமிழர்களாலும் , சர்வதேச தமிழர்களாலும் மற்றும் அரசியல் விமர்சகர்களாலும் வெளிப்படையாக கூறப்பட்டது. 2002ம் ஆண்டில் பிரபாகரன் ஊடகவியலார்கள் முன்பு முதல் முறையாகவும் இறுதியாகவும் தோன்றிய போது அவ்விடயத்தை பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் " அது ஒரு துன்பியல் சம்பவம் அது பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்" எனக் கூறினர். இருந்தும் 16 வருடங்களிற்கு பின்னரும் புலிகள் அவர்களுக்கு கிடைத்த முதல் சந்தர்பத்திலேயே முஸ்லிம்களை மூதூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தனர். இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்கள் அற்ற முழுக்க முழுக்க தமிழர்களை மாத்திரம் கொண்ட தமிழ் ஈழம் ஒன்றையே அமைக்க விரும்பினர் என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் பல செயற்பாடுகளை விமர்சித்துக் கண்டித்துள்ள ஆசிரியர் தான் பிரபாகரனின் பக்தர் அல்லது பிரபாகரனின் விசிறி என்பதை புத்தகத்தில் பல இடங்களில் வெளிப்படுத்த தவறவில்லை - என்பது மிகை இல்லை .

இனி நூலின் நீதிக்கு வருவோம், ஆசிரியர் நூலின் நீதிக்கு எந்தவிதமான பங்கமும் இளைக்காமல் வாசிப்பு ஓட்டத்திலும், தகவல் கோர்வையிலும் மற்றும் சுவாரசியத்திலும் நடுநிலையினை பேணியுள்ளார் என்பது உறுதி. வரலாற்று படைப்பு கருதியும், தகவல் உள்ளடக்கம் கருதியும் நிச்சயமாக உங்கள் வரிசையில் இடம் பிடிக்க கூடியதொரு நூல் தான்.

ஆசிரியர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைகளையும் , பாரபட்சங்களையும் களையும் இடத்து இதை ஒரு முழுமைபெற்ற ஆக்கம் என்றே கூறமுடியும். ஏன் முடிந்தால் போற்றவும் முடியும்.

யாழ்ப்பாணம் விசிட்- அண்ணாமலை

அண்ணாமலை IPS,  பலாலி என்ற இடப்பெயருக்கு கொடுத்த நகைக்கத்தக்க வேர்ச்சொல் ஆய்வு இவர் உண்மையிலேயே நியாயமான தேர்வு எழுதித்தானா IPS ஆனார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆனால் இப்பிரச்சனையை
ஆழமாகப்பார்த்தால் மேலுஞ்சில கசப்பான உண்மைகள் வெளிவரும். 
ஈழம் சிங்களவர்களதோ தமிழர்களதோ நிலம் அல்ல. அதன் ஆதிக்குடிகள் இயக்கர் நாகர் முதலியோர். (தொல்காப்பிய ஆதாரம்: வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு) ஆக இன்றைய பெரும்பாலான   யாழ்ப்பாண இடப்பெயர்களின் வேர் ஆதி இயக்கர் நாகர் மொழியிலிருந்தோ அம்மொழிகளிலிருந்தும் பிராகிருதம், சமஸ்கிருதம், பாளி, தமிழ்  முதலிய மொழிகளிலிருந்தும் பிறந்த சிங்கள மொழியிலிருந்தோ தான் தோன்றியது. இன்றைய சிங்களவர்களும் தமிழர்களைப்போல இந்தியாவிலிருந்து வந்தவர்களே. அவர்களது மொழியான சிங்களம் ஆதி இயக்கர் நாகர் மொழிகளிலிருந்தும் இந்திய  பிராகிருதம் சமஸ்கிருதம், பாளி, தமிழ் ஆகிய  மொழிகளிலிருந்தும் ஈழத்தில் பிறந்தது.
மனந்திறந்து பேசினால் யாழ்ப்பாணம் என்ற சொல்லுக்கு தமிழர்கள் இன்று வழங்குகிற யாழிசைக்கருவி, யாழ்ப்பாடி அடியொற்றிய வேர்ச்சொல் விளக்கமே வரலாற்று ஆதாரமற்ற கட்டுக்கதையே. யாப்பா பட்டுண என்ற சொற்களிலிருந்து வந்ததே
 யாழ்ப்பாணம். இச்சொற்கள் சிங்களமா? ஆதி இயக்கர் நாகர் மொழியா?  என்பதையறியும் திறமை எனக்கு கிடையாது. 

ஆனால் யாழ்ப்பாணத்தின் பல இடப்பெயர்கள் “சிங்களத்திலிருந்து” ( அதாவது இயக்கர் நாகர் மொழி+  பிராகிருதம்+ சமஸ்கிருதம் முதலியவற்றிலிருந்து)  வந்தது என்பது தமிழர்களுக்கு கசப்பான உண்மை. மிரிசுவில், கொற்றாவத்தை, வாதிரிவத்தை  முதலியன மிக எளிய உதாரணங்கள். 
சிங்களம் தமிழ்ச்சொற்களையும் உள்வாங்கி உருவான மொழி ஆனாலும் பெரும்பாலான  யாழ்ப்பாண இடப்பெயர்கள் தமிழ் வேர்ச்சொல் அடிப்படையிலிருந்து வந்தவை அல்ல . 

கடலூர், காரைக்கால், காநாடுகாத்தான் முதலிய அழகிய தூய தமிழ்  ஆதிப்பூர்வீக தமிழூர்கள் யாழ்ப்பாண ஈழத்திலில்லை.  ஆதி யாழ்ப்பாண ஊர்களான பலாலி, தெல்லிப்பளை, பளை, புலோப்பளை( கவனிக்க கொம்பு  “ள” . ழ அல்ல) ‘சிங்கள’ வாடை அடிக்கும்.  சிங்களமே ஒரு Hybrid மொழிதான். ஆகவே ஈழத்தமிழ் தேசிய வாதிகள் இவ்வரலாற்று உண்மையை “ ரேக் இற் ஈசியாக’ எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேசியக் கோட்பாட்டுக்கு இது பாதகமாகாது. 

ஆனால் பிற்கால ஈழத்தமிழ் தேசியவாதிகள் அண்ணாமலை IPS அதிகாரிக்கு முதலே அவசரப்பட்டு வரலாற்றை திரித்தார்கள். ஈழப்போர் முடிந்ததும்  பழை, தெல்லிப்பழை, புலோப்பழை என்று மவ் ழ போட்டு வரலாற்றைத் திரித்தார்கள். 
அண்ணாமலை IPS அதிகாரி வந்தார்.  மோட்டு சிங்களவனே  எழுதிய  யாழ்ப்பாண வேர்ச்சொல் ஆய்வை ஆங்கிலத்தில்  பலாலி விமான நிலைய  Tourist Guide பிரசுரத்தில் படிச்சார். யாழ்ப்பாணம். யாழ். யாழ்பாடி.  அட நாம் புகுந்து விளையாடலாமே என்று அடிச்சு விட்டார். பாலாலாலயம். பலாலி.

Dear Sir Annamalai, IPS 
I am terribly Sorry. Palaly Mission Failed.
- Your Secret Agent 
(நட்சத்திரன் செவ்விந்தியன் 007)