Tuesday 5 October 2021

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : - சிவராசா கருணாகரன்

 ஈழப்போரின் இறுதி நாட்கள்


இக்கட்டுரை 2009 ஆகஸ்டு மாத காலச்சுவடு இதழில் பிரசுரமானது. இக்கட்டுரையாளர் சிவராசா கருணாகரன் கவிஞரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமாவார். விடுதலைப்புலிகளின் வெளிச்சம் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர். பிரபாகரனை பல தடவைகள் சந்தித்தவர். பிரபாகரனை நேர்காணல் கண்டவர். புதுவை ரத்னதுரையினதும் EROS பாலகுமாரினதும் நெருங்கிய நண்பர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வசித்த இவர் யுத்தத்தின் இறுதி மாதத்தில் தனது குடும்பத்தோடு கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு தப்பிச்சென்று எழுதிய கட்டுரையே இது


அன்புள்ள கண்ணன்,

உங்களுடன் கதைத்ததில் நிறைய மகிழ்ச்சி. பேசுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால் சூழலும் நிலைமையும் அதற்கு வாய்ப்பாக இல்லை. தவிர கைபேசி மூலமான உரையாடல் அதற்குரியதும் இல்லை. பிற வழிகளில் பேசுவதற்கு வாய்ப்பும் இல்லை.

வன்னி நிலைமைகள் - வன்னியில் என்ன நடந்தது என்பதைச் சாட்சி நிலையில் நின்று எழுத வேண்டும். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் 
என்ன? எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது? இந்த வீழ்ச்சிக்கு 
யார் யார் காரணம் ?