1991-ம் ஆண்டு மே 21
இன்று ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம்.
நேருவின் பேரனை, இந்திராவின் மகனை, இந்தியாவின் முன்னாள் பிரதமரை, இந்தியாவை அதிகமுறை ஆண்ட கட்சியின் தலைவனை இன்றய நாளில் கொன்றொழித்தார்கள் புலிகள் .
ராஜீவ் காந்தியை புலிகள் மே 1991 இல் கொன்றார்கள் , ராஜீவ் காந்தியின் ஆன்மா புலிகளை மே 2009 இல் முள்ளிவாய்க்காலில் நின்று கொன்றது, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், ஆம் கொலையை தவிர வேறெதுவும் தெரியாத புலித்தலைமைகளை
தெய்வம் முள்ளிவாய்க்காலில் நின்று கொன்றது, இதில் அகப்பட்டுக்கொண்டு இறந்தது அப்பாவிப் பொதுமக்களும் , கட்டாயப்பயிற்சி கொடுத்து மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிபப் புலிகளுமே .
16 வயதில் லண்டனுக்கு வந்த ராஜிவ், தாத்தா போலவே ஐரோப்பியனாகவே வாழ்ந்தார், படித்தார், ஒரு சிறந்த விமானியாகவும் மாறினார், சிரியா போல வல்லரசுகள் குதற இருந்த இலங்கையினை அவர் 1986ல் காக்க சென்றார்,படுபாவிகளால் கொல்லபட்டார்,அவர் இல்லாத இலங்கை என்னாகும் என 2009ல் அனுபவபூர்வமாக கண்டது உலகம்.
ராஜீவ்காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காக 1987 ஜூன் 3ம் தேதி படகுகளில் உணவுப் பொருட்களை அனுப்பிய போது அதை இலங்கை ராணுவம் தடுத்து திருப்பி அனுப்பியது. அதை தொடர்ந்து அடுத்த நாள் ஜூன்4 தேதி போர் விமானங்களின் துணையுடன் இலங்கை வான்வெளிக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் பாராசூட்டில் உணவுப் பொருட்களும் மருந்துகளும் கிடைக்க உதவி செய்து ,ஈழத்தமிழர்களில் சிங்கள அரசு கை வைத்தால் உணவுப் பொருட்களை போட்ட விமானத்தில் இருந்து ஜெயவர்த்தனா அரசு மீது ஒரு குண்டையும் போட முடியும் என்று சொல்லாமல் சொல்லி தட்டி வைத்தார் ராஜீவ் காந்தி.
வடமராட்ச்சியில் இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து உயிரை காப்பாற்றிய ராஜீவ் காந்தியையும், மணலாற்றில் இந்திய அமைதிப் படையிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிய பிரேமா தாசவையும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொன்றனர் புலிகள்.,ராஜிவ் கொலையினை அடுத்து நடந்த விசாரணையில் புலிகள் நாங்கள் நாங்கள் இந்த கொலையை செய்யவில்லை என்றனர், அப்படி ஒரு வெடிகுண்டு எங்களுக்கு செய்யவே தெரியாது என்றனர்,சில மாதங்களில் பிரேமதாசாவினை அதே வெடிகுண்டால் கொல்லும்பொழுது உலகம் புலிகளை நோக்கி வாய்விட்டு சிரித்தது.
ஆனால் இதற்க்கு எல்லாம் மூல காரணமாக இருந்த கிளி மூக்கன் ஜெயவர்தனாவை புலிகளால் கொல்ல முடியவில்லை , ஏன் கிட்ட நெருங்கவே முடியவில்லை அவ்வளவுக்கு கிழட்டின் நரி மூளை. ராஜீவ் காந்தியையும் புலிகளையும் சண்டையில் இழுத்துவிட்டதே அந்த கிழட்டு நரி மூக்கன் தான் .
புலிகள் தோல்விக்கு ராஜீவ் காந்தி கொலையும் ஒரு காரணமே.புலிகள் சகோதரபடுகொலைகளை
செய்தது மட்டுமன்றி ,இன்னுமொரு படி மேலே போய் ஆசியாவிலேயே பெரிய தலைவன் என்று சொல்லப்பட்ட ராஜீவ் காந்தியையும் போட்டு தள்ளினார்கள்.
*காந்தியினை வணங்கி சுட்டான் கோட்சே, இந்திராவினை வணங்கி சுட்டான் பியாந்சிங், ராஜிவினையும் வணங்கியே கொன்றாள் தனு.
மனித குல விரோதிகளாலும், சொந்த இன மக்களை கொன்ற இனபடுகொலையாளிகளான புலிகளால் இந்தியாவின் பெரும் தலைவர் கொல்லட்ட நாள் இன்று.
* இனம் மானம் என்று உணர்வை தூண்டி ஆயுதம் ஏந்திய போராளிகளால் 20ஆம் நூற்றாண்டில் எந்த சமூகத்திற்கும் எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை என்பதைத் தீவிரமாக உணரவைத்த நாள் இன்று .
* புரட்சி என்று ஆயுதம் ஏந்திய கூட்டம் அது மக்களையும் அழிக்கும், அதோடு உடன்படாதவரையும் அழிக்கும், அதன் தவற்றைச் சுட்டிக் காட்டியவர்களையும் அழிக்கும், அனைத்தையும் நாசம் செய்துவிட்டு இறுதியில் தானும் அழியும். பேரழிவு மட்டுமே மிச்சம். இதைத் தெள்ளத் தெளிவாகக் காலம் உணர்த்திய நாள் இன்று.
*இந்தியாவின் மீது பெரும் தீவிரவாத தாக்குதல் நடத்தபட்ட நாள் இன்று .
*அமைதி பூங்காவாக அறியப்பட்ட தமிழ்நாட்டில்,
ராஜிவ் படுகொலை என்கிற பயங்கரவாத செயல் நிகழ்த்தப்பட்ட கருப்பு நாள் இன்று!
*இராஜிவ் காந்தியை படுகொலை செய்ததனால், விடுதலைப் புலிகள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட நாள் இன்று .
*பாம்புக்கு பால்வார்த்தல் என்றால் என்ன என்பதற்கும், நன்றிகெட்ட தனம் என்றால் என்ன என்பதற்கும் இந்தியா அர்த்தம் கண்டு கொண்டநாள் இன்று ,
*அவர்களின் ஏக திமிரான காரியங்களையும், அந்த நன்றிகெட்ட தனத்தையும் கண்டு நாணத்தால் தமிழராய் நாம் தலைகுனிந்த நாள் இன்று.
*ஈழமக்களின் போராட்டத்தை ஒரு கட்டபஞ்சாயத்து கும்பல் குழு ஒரே ஒரு குண்டுவெடிப்பு மூலம் தகர்த்த நாள் இன்று .
இதை எல்லாம் செய்தது மட்டுமல்லாமல் ,ஒரு வல்லரசு நாட்டையே அடித்து துரத்தினோம் என்று வேற பெருமை , உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது இந்தியாவின் உதவியை நாடுவதற்கு ? இதில் உலகறிந்த உண்மையை சொல்லப்போனால் , இந்தியன் அதிகாரிகள் கூறிய மாதிரி ஒரு சிகரட்டை பத்தி முடிப்பதற்குள்
அந்த குழுக்களையே அவர்களால் அளித்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு அது தேவையில்லை,
இதில ஆக தமாசான விசியம் என்னவென்றால் ராஜீவை கொன்றது ஒரு துன்பியல் சம்பவம்
என்று கூறி விட்டு இன்னும் அவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பது ,இதை இந்திய மக்கள் மறந்தாலும் ராஜீவ் காந்தியின் குடும்பம் இவர்களை ஒரு போதும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.
இதுகுறித்த ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா அவருடைய ட்விட்டர் பதிவில், இப்படி கூறுகிறார் ,
உங்களிடம் அன்பாக இல்லாதவர்களிடமும் அன்பாக இருங்கள். வாழ்கை நியாயமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றதாக இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்தாலும் அதுகுறித்து பிரச்னையில்லை. வானம் எத்தனை கறுப்பாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதயத்தை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதனை அன்பு கொண்டு நிரப்புங்கள். அது எவ்வளவு சோகமானதாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதுதான் என்னுடைய அப்பாவின் வாழ்கையிலிருந்து கிடைத்த பரிசுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி புலிகளாள் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், வெறும் 700 ற்கும் உட்பட்ட போராளிகள் மாத்திரம் தான் இறந்திருப்பார்கள்.
அவைகள் மட்டும் அல்ல 90ம் ஆண்டு முதற்கொண்டு 2009 மே 18 வரை லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.
50,000 ற்கு மேற்பட்ட இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர்,சிறுமியர் புதைகுழிக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.
தமிழ்நாடில் இலங்கைத் தமிழ் அகதிகளின் சித்திரவதை முகாம் உருவாகியிருக்காது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்கள் உருவாக சந்தர்ப்பம் இருந்திருக்காது..
இந்திய இராணுவத்திடம் தமிழ்ப் பெண்கள் தங்கள் மானத்தைப் பறிகொடுத்தீருக்க வேண்டி வந்திருக்காது.
வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறவேண்டி வந்திருக்காது.
அரசியல் கைதிகள் என்று யாரும் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்.
வன்னிக்காடுகள் எங்கும் இராணுவப் பிரசன்னம் வந்திருக்காது.
புத்திஜீவிகள் கல்விமான்கள், தொழிலதிபர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
கூட்டமைப்பு என்ற கூத்தாடிகள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
வி வாண்ட் டமில் ஈழம் என்று வெளிநாட்டு உண்டியல் குலுக்கிகள் கத்தி இருக்க மாட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் ஒருவர் கூட மாண்டிருக்க வாய்ப்பே இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.
பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.